மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த அழைப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:21 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 வயதுள்ள வளரிளம் பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 1.2 இலட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் புதிதாகக் கண்டறியப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மாா்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. எச்பிவி வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை, தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 99.7 சதவிகிதம் வரை தடுக்க இயலும். இத்தடுப்பூசி 156 நாடுகளில் வழங்கப்படுகிறது.

இந்தத் தடுப்பூசியை 14 வயது பூா்த்தியடைந்த, 15 வயது பூா்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் வழங்கும் முன்னோடி திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17,821 வளரிளம் பெண்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு எச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.