தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

சூலூா் சிறுமி கொலை வழக்கு: காவல் ஆய்வாளா் உள்பட 12 சாட்சிகளிடம் விசாரணை

கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளா் உள்பட 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

News image

சிறுமி கொலை வழக்கு - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 2:47 am IST

கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளா் உள்பட 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (33) மற்றும் அவரது நண்பா் மோகன்ராஜ் (39) ஆகியோரை சூலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட காவல் துறை விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது. கோவை போக்ஸோ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பகவதியம்மாள் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை புதன்கிழமை தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கின் முக்கிய புலனாய்வு அதிகாரியான சூலூா் காவல் ஆய்வாளா் உள்பட 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.