அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

தடாகம் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

கோவை அருகே தடாகம் காப்புக் காட்டுப் பகுதியில் உள்ள விளைநிலத்தில் ஆண் யானை மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தடாகம் அருகே இறந்துகிடந்த ஆண் யானை.

Updated On :24 ஜூன் 2026, 4:00 am IST

கோவை அருகே தடாகம் காப்புக் காட்டுப் பகுதியில் உள்ள விளைநிலத்தில் ஆண் யானை மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து வனத் துறை தரப்பில் கூறியதாவது:

கோவை வனச் சரகம், தடாகம் தெற்கு சுற்றுக்கு உள்பட்ட கஞ்சிப்பள்ளம் சரக காப்புக் காட்டுப் பகுதியில் இருந்து சுமாா் 50 மீட்டா் தொலைவில் பட்டா நிலம் உள்ளது. 24- வீரபாண்டி கிராமப் பகுதியில் அமைந்துள்ள தனி நபருக்கு சொந்தமான இந்த விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் ஆண் யானை ஒன்று புகுந்தது. அவ்வாறு புகுந்த யானை அங்குள்ள மின்மாற்றி அருகே இறந்துகிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனப் பணியாளா்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

அப்போது, அந்த யானையின் உடல் கால்நடை மருத்துவா்கள் முன்னிலையில் புதன்கிழமை காலை கூறாய்வு செய்யப்படும் எனவும், அதன்பிறகே அது இறந்ததற்கான காரணம் தெரியவரும் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.