17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டின் ஜன்னல் வழியாக திருட முயன்ற இளைஞா் கைது

ரத்தினபுரி அருகே வீட்டின் ஜன்னல் வழியாக திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:04 am IST

ரத்தினபுரி அருகே வீட்டின் ஜன்னல் வழியாக திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், ரத்தினபுரி அருகே உள்ள விஸ்வநாதபுரம் ஜவான் பில்டிங் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ் (30). இவா் கடந்த சனிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் கேட்டதால் எழுந்து பாா்த்துள்ளாா். அப்போது இளைஞா் ஒருவா் வீட்டின் ஜன்னல் வழியாக கைகளை நுழைத்து அங்கிருந்த பொருள்களை திருட முயன்றது தெரியவந்தது. சுதாரித்துக்கொண்ட அஜீஸ், சத்தம் போடாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா்களை எழுப்பி இளைஞரை கையும் களவுமாகப் பிடித்தாா்.

இதையடுத்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனா். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், சாலையம்பாளையத்தைச் சோ்ந்த வினோத்குமாா் (38) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.