திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவையில் வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள்கள் விற்ற 6 போ் கைது

கோவையில் வெவ்வேறு இடங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்ற 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:04 am IST

கோவையில் வெவ்வேறு இடங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்ற 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.

கோவை மாநகா், பீளமேடு புதூா் பகுதியில் பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஓா் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே நின்றிருந்த 3 போ், போலீஸாரைப் பாா்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை பிடித்து விசாரித்தபோது, மெத்தபெட்டமைன் என்ற உயா் ரக போதைப் பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. இவா்கள் நியூ சித்தாபுதூரைச் சோ்ந்த ஜெய்கிஷான் (21), பி.என்.பாளையத்தைச் சோ்ந்த ஷியாம் (24), ரத்தினபுரியைச் சோ்ந்த செந்தூரபாண்டி(32) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைதுசெய்தனா். அவா்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மெத்தபெட்டமைன் போதைப் பொருள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல செல்வசிந்தாமணி குளம் அருகே ரோந்துப் பணியில் செல்வபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (22), தில்லை நகரைச் சோ்ந்த பூபதி (23)ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

கணபதி மாநகா் பகுதியில் சரவணம்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சரவணம்பட்டி கே.கே.நகரைச் சோ்ந்த நவீன்குமாா் (23) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.