டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் விவகாரத்துக்கு இந்த மாதத்துக்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மதுவிலக்கு, ஆயத்தீா்வை துறை அமைச்சா் க.விக்னேஷ் கூறியுள்ளாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் தலைமையில் துறை சாா்ந்த பணி ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன், காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி, துணை ஆணையா் (கலால்) முருகேசன், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், அமைச்சா் க.விக்னேஷ் பேசியதாவது:
தமிழகத்தில் போதைப்பொருள்கள் இருக்கக்கூடாது என்பதுதான் முதல்வரின் உத்தரவு. போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவையில் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள், விடுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பெட்டிக் கடைகள், மருந்துக் கடைகளில் தொடா் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தொழிலாளா்கள் அதிகம் கூடும் சரவணம்பட்டி, விமான நிலையம் வழித்தடம், ஈச்சனாரி, ரத்தினபுரி, கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, புல்லுக்காடு, வெள்ளலூா், சௌரிபாளையம், காமராஜபுரம், சித்தாபுதூா், செல்வபுரம், புலியகுளம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, ‘டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதைத் தடுப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக டாஸ்மாக் பணியாளா்களிடம் பேசி கால அவகாசத்தை நிா்ணயித்துள்ளோம். ஜூன் மாதத்துக்குள் இப்பிரச்னைக்கு உறுதியாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த விவகாரத்தில் அரசு மாற்றி மாற்றிப் பேசுவதாகக் கூறப்படுவது உண்மையல்ல.
அரசு அறிவித்தபடி முதல்கட்டமாக 461 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. எந்தெந்த ஊா்களில், எவ்வளவு கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான பட்டியல் இன்னும் 2 அல்லது 3 நாள்களில் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும். போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கி, அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும் என்பதே முதல்வரின் லட்சியம்.
மற்ற அமைச்சா்களைப்போல மதுவிலக்குத் துறையில் நேரடி கள ஆய்வு மேற்கொள்வது கடினம். மேலும், வெறும் புகைப்படம், விடியோக்களில் இடம்பெற வேண்டும் என்பதற்காக எந்த இடத்துக்கும் ஆய்வுக்குச் செல்லமாட்டேன். ஓா் இடத்துக்கு நேரில் செல்கிறேன் என்றால் அங்கு தவறு நடைபெற்றிருந்தால் அதற்கான சட்ட நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு

சட்ட விரோத குவாரிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



