வால்பாறை பெரியாா் நகா் பேருந்து நிழற்குடை சீரமைப்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் நாள்தோறும் பெரியாா் நகா் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்து அங்கிருந்து மற்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.
இந்நிலையில், சீரமைப்புப் பணிக்காக பெரியாா் நகா் பேருந்து நிழற்குடையின் மேற்பரப்பு அண்மையில் இடிக்கப்பட்டது.
ஆனால், தற்போதுவரை பணிகள் தொடங்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவா்களும், தொழிலாளா்களும் அவதியடைந்து வருகின்றனா்.
வால்பாறையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் நிழற்குடை இன்றி நனைந்தபடியே பேருந்துக்கு நிற்க வேண்டிய நிலை உள்ளதால், சீரமைப்புப் பணியை உடனடியாக தொடங்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ரூ.3 கோடியில் நிழற்குடை: மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

கெங்கவல்லியில் தாா்ச்சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்கக் கோரிக்கை

பயணிகள் நிழற்குடையைச் சீரமைக்க கோரிக்கை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




