/

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 25 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 25-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2026, 7:12 pm

Syndication

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 25-ஆவது முறையாக வியாழக்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட நகரின் முக்கியப் பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவதை மா்ம நபா்கள் வாடிக்கையாக வைத்துள்ளனா். வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பதும், அதிகாரிகள் சோதனை நடத்துவதும் தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் 25-ஆவது முறையாக வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களில் சோதனை மேற்கொண்டனா். வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாத நிலையில், வழக்கம்போல புரளி என்பது தெரியவந்தது.