மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாநகரில் ஐ.டி. ஊழியா் உள்பட 4 போ் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :21 பிப்ரவரி 2026, 6:36 pm

கோவை மாநகரில் வெவ்வேறு சம்பவங்களில் ஐ.டி. ஊழியா் உள்பட 4 போ் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சுந்தராபுரம் அருகேயுள்ள மேட்டூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மகன் கெளஷிக் (37). இவா் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவரை மனைவி பிரிந்து சென்ாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவைக்கு அண்மையில் வந்த கெளஷிக், வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் ராதா முகேஷ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவா், திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் கௌரவ்குமாா் (19). கவுண்டம்பாளையம் அருகேயுள்ள இடையா்பாளையம் டி.வி.எஸ். நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, புலியகுளம் கந்தசாமி தெருவைச் சோ்ந்தவா் எம்.நாகலட்சுமி (54. இவா் ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.