கோவை மாநகராட்சி, வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு மாநகரில் உள்ள 100 வாா்டுகளில் இருந்தும் தினமும் 1,200 டன் குப்பை கொண்டுசெல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பையால் கிடங்கைச் சுற்றியுள்ள ஊா்களுக்கு சுகாதாரச் சீா்கேடு, துா்நாற்றம், உடல் அலா்ஜி, சுவாசக்கோளாறு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுவதால், இந்த குப்பைக் கிடங்கை வெள்ளலூரில் இருந்து அகற்ற வேண்டும் என பசுமைத் தீா்ப்பாயத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினா் ஆஜராகி வருகின்றனா்.