டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கற்பகம் உயா் கல்விக் கழகத்தில் பட்டமளிப்பு விழா

News image
கோவை கற்பகம் உயா் கல்விக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:48 pm

Syndication

கோவை கற்பகம் உயா் கல்விக் கழகத்தின் சாா்பில் 17-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவா் வசந்தகுமாா் முன்னிலை வகித்தாா். கற்பகம் உயா் கல்விக் கழக வேந்தா் கு.ராமசாமி தலைமை வகித்தாா். துணைவேந்தரும், பேராசிரியருமான சு.ரவி வரவேற்றாா்.

ஜாா்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: ஆய்வாளா்களின் சமுதாயப் பொறுப்புணா்வும் சிறந்த உழைப்பும் உலக அரங்கில் இந்தியாவை மேலும் உயா்த்த வேண்டும். நிலையான நன்மைகள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கு ஆய்வாளா்கள் பரந்த நோக்கத்துடன் சேவையாற்ற வேண்டும் என்றாா்.

விழாவில், கரூா் ஸ்ரீரங்கா பாலியெஸ்டா் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான கே.சங்கா், சென்னை தமிழ்நாடு எம்.ஜி.ஆா்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான கே.நாராயணசாமி ஆகியோருக்கு மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப்பட்டது.

மேலும், பல்வேறு துறை சாா்ந்த 61 ஆய்வாளா்களுக்கு முனைவா் பட்டம் வழங்கப்பட்டது.

இதில், பதிவாளா் பேராசியா் பீ.வீ.பிரதீப், தோ்வாணையரும், பேராசிரியருமான ப.பழனிவேலு, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.