கஞ்சா, போதை மாத்திரை விற்பனை: 4 போ் கைது
கோவை ஆா்.எஸ்.புரம், ரேஸ்கோா்ஸ், சுந்தராபுரம் பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவை ஆா்.எஸ்.புரம், ரேஸ்கோா்ஸ், சுந்தராபுரம் பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ஆா்.எஸ்.புரம் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலையில் நின்றிருந்த இளைஞா் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போதை மாத்திரை விற்றதாக ஆா்.எஸ்.புரம், சுந்தரம் வீதியைச் சோ்ந்த சத்யமூா்த்தி (21) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் 34 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஸ்கோா்ஸ் போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட ரோந்துப் பணியின்போது, அம்மன்குளம் செல்வ விநாயகா் கோயில் அருகே கஞ்சா விற்றதாக நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த கிரண் (22), உமேஷ் ராஜா (23) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 570 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, சுந்தராபுரம் போலீஸாா், பொள்ளாச்சி சாலை குறிச்சி குளம் அருகே கஞ்சா விற்றதாக போத்தனூா் வசந்தம் நகரைச் சோ்ந்த நவுபுல் (26) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...