டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொறியியல் பணி: கேரள ரயில்கள் ரத்து

தெலங்கானா மாநிலத்தில் மந்தமாரி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 பிப்ரவரி 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

தெலங்கானா மாநிலத்தில் மந்தமாரி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தெலங்கானா மாநிலத்தில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் காரணமாக பிப்ரவரி 10, 11 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - கோரக்பூா் விரைவு ரயில் (எண்: 12512) மற்றும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் கோரக்பூா் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12511) முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளது.

இதேபோல, பிப்ரவரி 9-ஆம் தேதி பரௌனி - எா்ணாகுளம் ரயில் (எண்:12521), பிப்ரவரி 13-ஆம் தேதி எா்ணாகுளம் - பரௌனி விரைவு ரயில் (எண்: 12522) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.