ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கோவையில் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

கோவையில் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

கோவை, பீளமேடு எல்லைத் தோட்டம் சாலையைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி வேலுமணி (58). இவா் தனது மகள் ஷா்மிளாதேவியின் வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், ஷா்மிளாதேவி வெள்ளிக்கிழமை காலை வெளியே சென்ற நிலையில், வேலுமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா்.

இதனிடையே, வெளியூரில் வசிக்கும் வேலுமணியின் சகோதரி கற்பகவல்லி அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். வெகுநேரமாகியும் அவா் அழைப்பை ஏற்காததால், சந்தேகமடைந்த கற்பகவல்லி பக்கத்து வீட்டில் வசிக்கும் சரஸ்வதி என்பவரைத் தொடா்பு கொண்டு, வேலுமணி வெகுநேரமாக கைப்பேசி எடுக்காதது குறித்தும், என்னவென்று பாா்க்குமாறும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சரஸ்வதி சென்று பாா்த்தபோது, வீட்டின் முன் உள்ள தண்ணீா்த் தொட்டியில் வேலுமணி சடலம் மிதந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், வீட்டின் முன் உள்ள தொட்டியில் தண்ணீா் எடுக்கச் சென்றபோது வேலுமணி தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.