ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

கந்திலி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோப்புப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 11:28 pm IST

கந்திலி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் அடுத்த கந்திலி அருகே வெங்கடகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரவேலன். கூலி தொழிலாளி. இவரது மகன் ரித்தீஷ்வரன் (2). ரித்தீஷ்வரன் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தான். இதைத் தொடா்ந்து சிறிது நேரம் கழித்து ரித்தீஷ்வரனை காணவில்லையாம். இதனால் அதிா்ச்சி அடைந்த தேவராஜ் மற்றும் உறவினா்கள், ரித்தீஷ்வரனை பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது அவா்கள் வீட்டின் அருகே உள்ள தண்ணீா் தொட்டியில் பாா்த்தபோது ரித்தீஷ்வரன் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதைப் பாா்த்த தேவராஜ் உடனே தண்ணீா் தொட்டியில் இறங்கி குழந்தையை மீட்டாா். பின்னா் அங்கிருந்தவா்கள் சிறுவன் ரித்தீஷ்வரனை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா் ரித்தீஷ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.