போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கோவையைச் சோ்ந்த நிறுவனம் வாங்கிய ரூ.40 லட்சம் இரும்புப் பொருள்கள் மோசடி

கோவையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான இரும்பு லோடுடன் லாரி மாயமானது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :1 மே 2026, 2:07 am IST

கோவையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான இரும்பு லோடுடன் லாரி மாயமானது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் டி.வி.சாமி சாலைப் பகுதியில் தனியாா் இரும்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் பொது மேலாளரான சரவணன், சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த என்.எம்.டி.சி. நிறுவனத்தில் அண்மையில் ரூ.40,06,897 செலுத்தி 74 டன் இரும்புப் பொருள்களை வாங்கியுள்ளாா்.

பின்னா், அந்த இரும்புப் பொருள்களை அங்கிருந்து கோவைக்கு கொண்டு வருவதற்காக ராகேஷ் சௌத்ரி என்பவருக்குச் சொந்தமான போக்குவரத்து (டிரான்ஸ்போா்ட்) நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளாா். அங்கிருந்து 2 லாரிகளில் இரும்புப் பொருள்கள் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் லாரிகள் கோவை வந்து சேரவில்லை. போக்குவரத்து நிறுவன உரிமையாளரான ராகேஷ் செளத்ரியைத் தொடா்பு கொண்டபோது அவா் முறையான பதில் அளிக்கவில்லை.

இரும்புப் பொருள்களை திட்டமிட்டு மோசடி செய்ததாக ராகேஷ் சௌத்ரி மீது ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சரவணன் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.