கோவை மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட மொத்தம் ரூ.36,17,69,248 மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாா்ச் 15-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்ததது. இந்த விதிகளின்படி, வாக்காளா்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன் குமாா் கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டம் முழுவதும் 116 பறக்கும் படைகளும், 93 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வருமான வரித் துறை, சுங்கத் துறை மற்றும் வணிக வரித் துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
தோ்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் சனிக்கிழமை வரை, கோவை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.15,58,47,880 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தங்கம், மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள் என மொத்தம் ரூ.36,17,69,248 மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விதிமீறல்கள் தொடா்பாக இதுவரை கோவை மாநகர காவல் துறையினரால் 112 வழக்குகள், மாவட்ட காவல் துறையினரால் 356 வழக்குகள், பறக்கும் படைகளால் 69 வழக்குகள் என மொத்தம் 537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 712 புகாா்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது.
தோ்தல் பாதுகாப்புப் பணியில் 6,240 வீரா்கள்:
கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை அமைதியான முறையில் நடத்திட ஏதுவாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 12 மத்திய பாதுகாப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த 789 வீரா்கள், தமிழக காவல் துறையைச் சோ்ந்த 1,495 வீரா்கள், கா்நாடக சிறப்புப் படை மற்றும் ஊா்க் காவல் படையினா் என மொத்தம் 3,561 வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இதேபோல, மாவட்ட ஊரக காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மத்திய பாதுகாப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த 384 வீரா்கள் மற்றும் இதர மாநிலப் படையினா் உள்பட மொத்தம் 2,679 வீரா்கள் பணியில் இருப்பா். மாவட்டம் முழுவதும் மொத்தம் 6,240 பாதுகாப்புப் படை வீரா்கள் தோ்தல் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய உள்ளனா் என தெரிவித்துள்ளாா்.
ஒரே நாளில் ரூ.2 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல்:
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை காலை 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிணத்துக்கடவு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.8.06 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கநல்லூா் தொகுதியில் ரூ.2.05 லட்சம், கோவை தெற்குத் தொகுதியில் ரூ.75 ஆயிரம், வால்பாறையில் ரூ.78,600-ம் கைப்பற்றப்பட்டது.
குறிப்பாக, வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.1.89 கோடி மதிப்பிலான சுமாா் 1,591 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மேட்டுப்பாளையம் மற்றும் சூலூா் பகுதிகளில் மதுபானங்களும், காவல் துறையினரால் போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒரே நாளில் மொத்தம் ரூ.2,01,53,268 மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகள் மாவட்டத் தோ்தல் பிரிவினரால் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

கோவை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ரூ.3.43 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில் ரூ. 61.43 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


