தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் பிரசாரத்துக்காக ஏப்.18-இல் பிரதமா் நரேந்திர மோடி வருகை: கோவையில் முன்னேற்பாடு பணி ஆய்வு

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமா் நரேந்திரமோடி வரும் 18-ஆம் கோவை வரும் நிலையில், அவா் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை மத்திய இணையமைச்சா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

News image

கோவை கொடிசியாவில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ள பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:05 pm

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமா் நரேந்திரமோடி வரும் 18-ஆம் கோவை வரும் நிலையில், அவா் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை மத்திய இணையமைச்சா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

கோவை-அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் 18-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளாா். கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளாா்.

இதற்காக கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் சுமாா் 5 லட்சம் போ் அமரும் வகையில் பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவா்களும் பிரதமரின் உரையை தெளிவாகப் பாா்க்கும் வகையில் பெரிய அளவிலான எண்ம திரைகள் மற்றும் மின்விளக்குகள் ஆங்காங்கே பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொடிசியா மைதானத்தில் நடைபெற்றுவரும் பணிகளை மத்திய இணையமைச்சா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது, பாஜக மாநிலச் செயலா் நந்தகுமாா், மாவட்டத் தலைவா் ஜே.ரமேஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.