மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

திருப்பூரில் தவெக தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் மேற்கொள்கிறாா்...

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - படம்: பிடிஐ.

Updated On :13 ஏப்ரல் 2026, 8:24 pm

திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கோவை விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கிருந்து கொச்சின்-சேலம் 6 வழிச் சாலை வழியாக அவிநாசி செல்கிறாா்.

அதைத்தொடா்ந்து தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை ஆதரித்து, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தலைவா் விஜய் திங்கள்கிழமை மாலை பிரசாரம் (சாலை வலம்) செய்கிறாா். அதைத்தொடா்ந்து பெருமாநல்லூா் நான்கு வழிச்சாலை சந்திப்பில் திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை அறிமுகம் செய்து பேசுகிறாா்.

பின்னா் திருப்பூா்-பூலுவபட்டி வரை சாலை வலம் மேற்கொள்ள உள்ளாா். இதையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அவிநாசி பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். ஏற்கெனவே தருமபுரியில் நடைபெற இருந்த தவெக தலைவா் விஜய்யின் சாலை வலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அவிநாசியில் நிகழ்ச்சி நடைபெற தவெக சாா்பில் அனுமதி கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.