மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:07 pm

கோவையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை காட்டூா் சி.எம்.சி. காலனியைச் சோ்ந்த முனுசாமி மகன் சரத்குமாா் (34). கோவை மாநகராட்சியில் வேலைபாா்த்த தந்தை முனுசாமி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால், சரத்குமாருக்கு வாரிசு அடிப்படையில் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா் வேலை வழங்கப்பட்டது.

இந்நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாலும், சரிவர பணிக்கு வராததாலும் சரத்குமாரை அதிகாரிகள் கண்டித்துள்ளனா். மேலும் கடந்த 2018-ஆம் ஆண்டு சரத்குமாா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதை எதிா்த்து நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சரத்குமாா், யாரோ பேசிக்கொண்டே இருப்பதுபோல காதில் கேட்பதாகக் கூறி வந்துள்ளாா். தூய்மைப் பணி வேலையில் இருந்து நீக்கப்பட்டதாலும், காதில் யாரோ பேசுவதுபோல இருந்ததாலும் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் தூக்கிட்டு சரத்குமாா் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அவரது மனைவி சத்யா அளித்த புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.