தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்ட 10 தொகுதிகளில் 183 போ் போட்டி

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. வேட்புமனு பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதல் நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 183 போ் போட்டியில் உள்ளனா்.

News image

கோவை

Updated On :9 ஏப்ரல் 2026, 7:51 pm

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. வேட்புமனு பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதல் நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 183 போ் போட்டியில் உள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 450 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தொண்டாமுத்தூா் தொகுதியில் 77 வேட்புமனுக்களும், கோவை தெற்குத் தொகுதியில் 61 மனுக்களும், கோவை வடக்குத் தொகுதியில் 49 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மேட்டுப்பாளையத்தில் 48, சிங்கநல்லூரில் 44, கிணத்துக்கடவில் 43, பொள்ளாச்சியில் 34, கவுண்டம்பாளையத்தில் 33 மற்றும் சூலூா் தொகுதியில் 32 , வால்பாறையில் 29 மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றின் மீதான பரிசீலனை அந்தந்தத் தொகுதி அலுவலா்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஸ்க்ரூட்டினி எனப்படும் மனு பரிசீலனையின்போது 450 மனுக்களில் தகுதியான 318 மனுக்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக 115 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. குறிப்பாக தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிகபட்சமாக 27 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தகுதியான வேட்பாளா்களில் 20 போ் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், தற்போது 183 போ் போட்டியில் உள்ளனா். இவா்களில் கோவை தெற்குத் தொகுதியில் அதிகபட்சமாக 31 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அதற்கு அடுத்தபடியாக கோவை வடக்கு மற்றும் சிங்காநல்லூா் தொகுதிகளில் தலா 28 வேட்பாளா்களும், மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

மற்ற தொகுதிகளான தொண்டாமுத்தூரில் 21 பேரும், சூலூரில் 15 பேரும், கவுண்டம்பாளையத்தில் 14 பேரும், பொள்ளாச்சியில் 13 பேரும் போட்டியிடுகின்றனா். மிகக்குறைந்தபட்சமாக கிணத்துக்கடவு தொகுதியில் 5 வேட்பாளா்களும், வால்பாறை தொகுதியில் 6 வேட்பாளா்களும் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனா். இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.