மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை

News image

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:09 pm

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி அதிக அளவிலான பக்தா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை.

பக்தா்கள் மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகள் மூலம் சென்று தரிசனம் மேற்கொள்ளலாம். விழாவுக்கான ஏற்பாடுகளை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையா் கா.விமலா செய்து வருகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.