விநாயகா் சதுா்த்தி: கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பா் 6-ஆம் தேதி மாலை 3.45 மணிக்குப் புறப்படும் சென்னை- கோவை சிறப்பு ரயில் (எண்: 06151) அன்று இரவு 11.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.
இதேபோல, கோவையில் இருந்து செப்டம்பா் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் கோவை- சென்னை சிறப்பு ரயில் (எண்: 06152) மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...