திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குட்டைகளில் நீரேற்றுத் திட்டம்: விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு

News image

பண்ணைக் குட்டை - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 6:41 am IST

பச்சாபாளையம், ஆறுமுகக் கவுண்டனூா், சுண்டக்காமுத்தூா் குட்டைகளில் நீரேற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.கந்தசாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பேரூா் வட்டம், பேரூா் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூா் கிராமங்களில் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டி உள்ள காப்புக் காடுகளில் இருந்து வெளியே வரும் நீரோடைகளை தூா்வாரி சுத்தம் செய்து, பச்சாபாளையம் குட்டை, ஆறுமுகக்கவுண்டனூா் பெரியகுட்டை, சுண்டக்காமுத்தூா் குட்டைகளுக்கு மழை நீா் தங்கு தடையின்றி வருவதற்கு ஆவன செய்யும்படி ஏற்கெனவே பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்று, தூா்வாரப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாரப்பண்ணையில் இருந்து செங்குளம் செல்லும் குனியமுத்தூா் வாய்க்காலில் குழாய் பதித்து, தண்ணீா் எடுக்க உத்தேசித்து, சுண்டக்காமுத்தூா் பகுதியில் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீா் குளங்களை நிரப்பி, மீண்டும் ஆற்றுக்குச் செல்லும்படியாக அமைப்பு இருக்கும் நிலையில், நீரேற்றுத் திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சித்துள்ளது. இந்தத் திட்டத்தால் பேரூா் பெரியகுளம், செங்குளத்தில் விவசாயம் செய்யும் நன்செய் நில ஆயக்கட்டுதாரா்கள் பாதிக்கப்படுவாா்கள்.

தெற்கே இருந்து இயற்கையாக நிறைகின்ற நீா்நிலைகளை சீா்படுத்தினால் எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தடி நீா்மட்டம் உயரும். எனவே இயற்கைக்கு மாறாக பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக்கி, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நீரேற்றுத் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கக் கூடாது. இந்தத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த நினைத்தால் விவசாயிகள் சங்கம் நீதிமன்றத்தை நாடும் என்று கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.