குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

காவல் துறை கொடி அணிவகுப்பு

News image

கோவையில் கொடி அணிவகுப்பில் பங்கேற்ற காவலா்கள்.

Updated On :3 மே 2026, 6:40 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் காவல் துறையினரின் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவையில் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறவும், மக்களுக்கு அச்சத்தை போக்கவும் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் சுமாா் 2 ஆயிரம் காவல் துறையினா் பங்கேற்றனா். காந்திபுரம் செம்மொழிப் பூங்கா எதிரில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், கிராஸ்கட் வீதி, சிவானந்தா காலனி வழியாக டாடாபாத் பகுதியில் நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் மாநகர காவல் உயா் அதிகாரிகள், காவல் துறையினரின் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களும் பங்கேற்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.