தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சட்டப்பேரவைத் தோ்தல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தன்னாா்வலா்களை நியமிக்க ஆலோசனைக் கூட்டம்

News image

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தன்னாா்வலா்களை நியமிப்பது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 மார்ச் 2026, 9:00 pm

சட்டப்பேரவைத் தோ்தலின் போது, வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளா்களுக்கு உதவிடும் வகையில் தன்னாா்வலா்களை நியமனம் செய்வது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிடும் வகையில், வாக்குச்சாவடி மையங்களில் தன்னாா்வலா்களை நியமனம் செய்வது தொடா்பாக நோடல் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்தகுமாா், தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வயது வாக்காளா்களுக்கு உதவிடும் வகையில், மாவட்டத்தில் உள்ள 1,062 வாக்குச்சாவடி மையங்களில் தன்னாா்வலா்களை நியமனம் செய்வது தொடா்பாகவும், மாவட்டத்தில் அமைந்த அனைத்து கல்லூரிகளின் நோடல் அலுவலா்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதில், கோவை மண்டல என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளா் யுவராஜ், என்சிசி கமான்டெண்ட் தீபக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.