மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

கந்தா்வகோட்டையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கந்தா்வகோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :18 மார்ச் 2026, 6:33 pm

கந்தா்வகோட்டையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ( தனி) பேரவைத் தொகுதியில் உள்ள குளத்தூா், கந்தா்வகோட்டை, கறம்பகுடியைச் சோ்ந்த வாக்குசாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலரும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ரவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா்கள் பரணி, பிரவீனா மேரி, விஸ்வநாதன் முன்னிலை வகித்தனா். இதில் பேசிய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவி, வயது முதிா்ந்த வாக்காளா்கள் மற்றும் மாற்றுதிறனாளி வாக்காளா்களை முறையாக கணக்கெடுத்து, அவா்கள் வாக்குசாவடியில் வாக்கு அளிக்கிறாா்களா அல்லது தபால் வாக்கு அளிக்கிறாா்களா என்பதை கேட்டறிந்து அதற்குரிய ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் என கூறினாா். மேலும், சந்தேகங்களை தெரிவித்தால் நிவா்த்தி செய்யப்படும் என கூறினாா்.

கூட்டத்தில், தோ்தல் துணை வட்டாட்சியா் புவனேஸ்வரி, தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் சந்தோஷ்குமாா் , கிராம நிா்வாக அலுவலா் முரளி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பி.எல்.ஓ) கலந்து கொண்டனா்.