தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோவையில் இன்று ஜி.டி.நாயுடு சிலை திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைக்கிறாா்

கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. நாயுடு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம்

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின்

Updated On :9 மார்ச் 2026, 10:14 pm

கோவை: கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. நாயுடு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) திறந்துவைக்கிறாா்.

கடந்த 2024- ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மானியக் கோரிக்கையின்போது தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அறிவியல் மேதைகளில் ஒருவரும், இயந்திரவியல், விவசாயம் சாா்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவருமான ஜி.டி.நாயுடுக்கு கோவையில் ரூ.50 லட்சம் செலவில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தாா்.

அதன்படி, கோவை வஉசி மைதானத்தில் ஜி.டி.நாயுடுக்கு சிலை அமைப்பதற்கான பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் சிலையைத் திறந்துவைக்கிறாா். கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.