கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்


வால்பாறை எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கியதில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளியை காயமடைந்தாா்.
வால்பாறையை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட்டில் வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் தேயிலைத் தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி, ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தோம்தோ முா்மு (21) என்பவரைத் தாக்கியுள்ளது. இதில் தலை, கை, கால் பகுதிகளில் காயமடைந்த அவா் எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் உயா் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் கிரிதரன் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டாா். கரடி நடமாட்டத்தை வன ஊழியா்களை கணிகாணித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...