புதிதாய் பிறக்கும் பழைய மரங்கள்!
உதகை, அக் 19: முதுமையின் காரணமாகவும், இயற்கை இடர்ப்பாடுகள் காரணமாகவும் பட்டுப்போன மர வகைகளை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில் நீலகிரி தோட்டக்கலைத்துறை புதிய திட்டம் உருவாக்கியுள்ளது. ÷இப்புதிய திட்


உதகை, அக் 19: முதுமையின் காரணமாகவும், இயற்கை இடர்ப்பாடுகள் காரணமாகவும் பட்டுப்போன மர வகைகளை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில் நீலகிரி தோட்டக்கலைத்துறை புதிய திட்டம் உருவாக்கியுள்ளது.
÷இப்புதிய திட்டத்தால் 1848ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உதகை அரசினர் தாவரவியல் பூங்காவிலுள்ள 344 வகை மரங்களும் பாதுகாக்கப்படுமென தோட்டக்கலைத் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இது தொடர்பாக உதகை அரசினர் தாவரவியல் பூங்காவின் உதவி இயக்குநர் டாக்டர் வி.ராம்சுந்தர் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:
÷உதகையிலுள்ள அரசினர் தாவரவியல் பூங்கா 1848ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். அப்போது சுமார் 344 வகையிலான மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இம்மரங்களின் வயது தற்போது நூற்றாண்டைக் கடந்துவிட்டதால் ஏராளமான மரங்கள் மெதுவாக உயிரிழந்து வருகின்றன. இத்தகைய மர வகைகள் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நீலகிரிக்கு கொண்டு வரப்பட்டவையாகும்.
எனவே, தற்போது உயிரிழந்து வரும் மர வகைகளுக்கு மாற்றாக அதே வகையைச் சேர்ந்த மரக்கன்றுகளை நடும் திட்டம் தோட்டக்கலைத் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி தாவரவியல் பூங்காவிலுள்ள தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட மெக்னோலியா மர வகையில் புதிய கன்று உருவாக்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பான் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தூஜா ஜப்பானிகா என்ற மர வகையும், தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தூஜா ஒரியண்டாலிஸ் என்ற மர வகையும் விரைவில் நடவு செய்யப்படவுள்ளன. இதைப்போல அரசினர் தாவரவியல் பூங்காவில் இவ்வாண்டில் மட்டும் 25க்கும் மேற்பட்ட மர வகைகளை நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. அழிந்து வரும் மர வகைகளிலிருந்து புதிய கன்றுகளை உதகையிலேயே உருவாக்கி அதன் மூலம் இவ்வகையினை அதிகரிக்கும் வகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் திசு வளர்ப்புக்கூடம் முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.÷உதகையில் உருவாக்க முடியாத மரக் கன்றுகளை சம்பந்தப்பட்ட வெளிநாடுகளிலிருந்து வாங்கி அவற்றை ஏற்கெனவே அந்த வகையிலான மரங்கள் இருந்த இடத்திலேயே நட்டு பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.÷உதகை அரசினர் தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டதும், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தாவரவியல் பூங்காவின் பொறுப்பிலிருந்தே உயர் அலுவலர்களால் இப்பூங்காவின் வரைபடம் மற்றும் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த வகையிலான தாவரங்கள் மற்றும் மர வகைகள் உள்ளன என்பதை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வரலாற்று ஆவணத்தை அடிப்படையாக வைத்தே ஏற்கெனவே இருந்த மரங்களுக்கு அருகிலேயே புதிய மரக்கன்றுகளும் நடப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
÷இதன் மூலம் பழமையை பாதுகாப்பதோடு, உதகையிலுள்ள அபூர்வ வகையிலான அனைத்து வகையான மரங்கள் மற்றும் தாவரங்களை தொடர்ந்து பராமரிக்க முடியுமென்பது உறுதி. தோட்டக்கலைத்துறையின் இப்புதிய முயற்சி தாவரவியல் ஆராய்ச்சியாளர்களாலும், தோட்டக்கலையினராலும் பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாகவே மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...