கோவை, ஆக. 11: தெற்கு ரயில்வேக்கு அதிக வருவாயை ஈட்டித் தரக்கூடிய ரயில் நிலையங்களில் ஒன்றாக இருந்தபோதும், ரயில் வசதிகளில் கோவை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
கோடிக் கணக்கில் வருவாயை ஈட்டித் தந்தாலும் கோவை ரயில் நிலையம் வசதிகளில் பின்தங்கியே இருக்கிறது. பயணிகளுக்கு ரயில் சேவையாவது திருப்தியாக இருக்கும் என்றால், அதுவும் கோவை பகுதியைப் பொருத்தவரை இரண்டாம்பட்சமாகத்தான் பார்க்கப்படுகிறது. பயணிகள், சரக்குப் போக்குவரத்து மூலமாக ரயில்வே துறைக்கு கோவை ரயில் நிலையம் அதிக வருவாயைக் கொடுக்கிறது.
ஆனால், கூடுதல் ரயில் உள்பட எந்த வசதியைப் பெறுவதாக இருந்தாலும் பெரும் போராட்டத்துக்குப் பிறகே கிடைக்கிறது.
கோவை - பெங்களூர் இடையே இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் வேண்டும் என்ற
நீண்ட கால கோரிக்கை இருந்து வருகிறது. ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட் அறிவிப்பின்போதும் கோவை - பெங்களூர் இடையே புதிய ரயில் விடப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்துடனேயே சென்று கொண்டிருக்கிறது. அதேபோல ஒவ்வொரு
ரயில்வே பட்ஜெட்டுக்குப் பிறகும் நேரடி ரயில் வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கோவையைச் சேர்ந்த தொழில் அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள் இக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் ரயில்வே நிர்வாகம் இன்னும் செவிசாய்க்கவில்லை.
தொழில், வர்த்தகம், கல்வி தொடர்பாக கோவையில் இருந்து ஏராளமானோர் பெங்களூருக்குச் சென்று வருகின்றனர். பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கோவையைச் சேர்ந்தோர் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள பம்பு உள்ளிட்ட என்ஜினியரிங் உற்பத்தி பொருள்கள் அனுப்புவதற்கு நேரடி ரயில் வசதி என்பது அவசியமாக இருக்கிறது.
இதற்கிடையே கண்ணனூர் - யஷ்வந்த்பூர் இடையே வாரத்தில் மூன்று நாள்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது அனைத்து நாள்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் முக்கிய ரயில் நிலையங்களான கோவை, திருப்பூர் ரயில் நிலையங்கள் விடுபட்டுள்ளன.
இரவு 11.30 மணிக்கு கோவையை கடக்கும் இந்த ரயில் மறுநாள் காலை 7 மணிக்கு யஷ்வந்த்பூரை அடைகிறது. கண்ணனூர் புறப்பட்டு தலசேரி, வடகரை, கோழிக்கோடு, திருச்சூர், சொரனூர், பாலக்காடு நிலையங்களில் நின்று வரும் இந்த ரயில் கோவைக்கு வராமல் போத்தனூர், இருகூர் வழியே சென்றுவிடுகிறது.
கோவை, திருப்பூர் இரு ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நிற்பதில்லை. கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு அடுத்ததாக ஈரோடு ரயில் நிலையத்தில் தான் நின்று செல்கிறது.
கோவை, திருப்பூர் பகுதிகளின் மிக முக்கியமான கோரிக்கை, பெங்களூருக்கு இரவு நேர ரயில் வேண்டும் என்பது. ஆனால், அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளபோது இப்பகுதி மக்களின் கோரிக்கையைத் தவிர்த்துவிட்டனர் என நுகர்வோர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
ஏனெனில், கோவை மற்றும் திருப்பூர் நகரங்களில் இருந்து தொழில் மற்றும் வியாபாரத்துக்காக தினசரி பெங்களூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகம். நேரடி
ரயில் இல்லையென்றாலும், பெங்களூருக்கு அருகே இருக்கும் யஷ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலையாவது கோவை, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டியது அவசியம்.
ரயில் பயணிகளின் எண்ணிக்கை, வருவாய் ஆகியவற்றைக் கணக்கிடும்போது பாலக்காடு ரயில் நிலையத்தைக் காட்டிலும் கோவை முன்னிலையில் உள்ளது.
இருந்தபோதும் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை, திருப்பூர் ரயில் நிலையங்களில் நிற்காமல் இயக்குவது துரதிஷ்டவசமானது என்கிறார் கோயமுத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது: பாலக்காடு, ஈரோடு ரயில் நிலையங்களிலேயே நிறுத்தும்போது கோவை, திருப்பூரைப் புறக்கணித்தது ஏன் எனத் தெரியவில்லை. கோவையில் இருந்து பெங்களூருக்கு புதிய ரயிலை ரயில்வே நிர்வாகம் இயக்கப்போவதில்லை. அப்படியிருக்கும்போது விரிவாக்கம் செய்யும் ரயிலைக்கூட கோவையைச் சேர்ந்தோர் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர்.
கோவை - தூத்துக்குடி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை வரை நீட்டிப்பது போன்ற ரயில்வேயின் அறிவிப்புகள் கிடப்பிலேயே இருக்கின்றன என்றார்.
இப் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிடப்பில் உள்ள அறிவிக்கப்பட்ட ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும். அதோடு, கண்ணனூர் - யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

