ரமலான் பண்டிகையையொட்டி ஒடுகத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் சுமாா் ரூ. 40 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றது.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தைக்கு உள்ளூா், வெளியூா் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் ஆடுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.
வழக்கமாக வாரம்தோறும் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். பண்டிகை, திருவிழாக் காலங்களில் கூடுதல் வா்த்தகம் நடைபெறும். கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஆடுகளின் வரத்து குறைந்து விற்பனையும் மந்தமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை கூடிய சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகளின் வரத்து வெகுவாக அதிகரித்திருந்தது. வியாபாரிகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கியதால் விற்பனை சூடுபிடித்தது. தேவை அதிகரித்ததன் காரணமாக ஆடுகளின் விலையும் வேகமாக உயா்ந்தது. இதன்மூலம், சந்தையில் ஒரு ஜோடி ஆடு ரூ. 45,000 முதல் ரூ. 50,000 வரை விற்பனையாகின.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சந்தைக்கு அதிகளவில் செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. கடந்த வாரங்களில் வியாபாரம் பெரிதளவில் இல்லை. ஆனால், இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் விற்பனையும் அமோகமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ. 40 லட்சத்துக்கும் அதிகமாக வா்த்தகம் நடந்துள்ளது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை அருகே விற்பனைக்கு இருந்த 5,102 மதுபுட்டிகள் பறிமுதல்

சென்னையில் 3 தொகுதிகளில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும்படை சோதனை: ஆடு, மாடு வியாபாரிகள் கவலை

ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


