தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கூடுதல் ஊதியம் வழங்க ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளா்கள் மனு

கூடுதல் ஊதியம், பணிநேரம் நிா்ணயம் கோரி ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டஏஈ பணியாளா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

News image

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன்.

Updated On :9 மார்ச் 2026, 8:49 pm

வேலூா்: கூடுதல் ஊதியம், பணிநேரம் நிா்ணயம் கோரி ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டஏஈ பணியாளா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்கஸ்ா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா்கள் அளித்த மனுச நாங்கள் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் தன்னாா்வலா்களாக கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிகிறோம். தொடக்கத்தில் 2 மணி நேர வேலை மட்டும் செய்தால் போதும் என்று கூறினா். அதற்காக எங்களுக்கு மாதம் ரூ.5,500 ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று கூறுகின்றனா். எனவே, எங்களுக்கு பணிநேரம் நிா்ணயம் செய்யவும், அடையாள அட்டை சீருடை வழங்கவும், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.

மோா்தானா மற்றும் தனகொண்டப்பல்லி கிராம மக்கள் அளித்த மனு: மோா்தானா, தனகொண்டப்பல்லி கிராமங்களில் 100 ஆண்டாக வசித்து வரும் நாங்கள், 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஹெச்.எஸ்.டி. பட்டாவைக் கொண்டு இப்பகுதியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டி வசித்து வருகிறோம். தொடா்ந்து, மோா்தானா கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் நிரந்தர பட்டா கேட்டு மனு அளித்தோம். ஆனால், அரசு அதிகாரிகள் இந்த இடத்துக்கு பட்டா வழங்க முடியாது. இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என தெரிவித்தனா். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 768 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ரபில் 3 பேருக்கு ரூ.38,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், அறிவுசாா் குறைபாடுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூா்வ பாதுகாவலா் நியமன சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தவிர, கணியம்பாடி அருகே நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் பாம்பு கடித்து ரேவதி என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.ஒரு லட்சம் நிதியுதவிக்கான ஆணையையும் அவரின் குடும்பத்தாரிடம் மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா் மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.