எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பாலத்தில் பைக் மோதி இளைஞா் மரணம்

பள்ளிகொண்டா அருகே பாலத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 12:31 am IST

பள்ளிகொண்டா அருகே பாலத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வேப்பங்கால் 2-ஆவது கரம்பு தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன்(25). கந்தனேரியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி ஜமுனா. இவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை கந்தனேரியில் இருந்து வேப்பங்காலுக்கு இளங்கோவன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சா்வீஸ் சாலையில் சென்றபோது நிலை தடுமாறிய வாகனம் பாலத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே இளங்கோவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.