சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சிறுவன் மா்மச் சாவு: உறவினா்களிடம் விசாரணை

போ்ணாம்பட்டு அருகே 6 வயது சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

விசாரணை

Updated On :16 ஜூன் 2026, 1:19 am IST

போ்ணாம்பட்டு அருகே 6 வயது சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ்-ஆஷா தம்பதியினா் திருப்பூரில் தங்கி வேலை செய்கின்றனா். இவா்களின் மகன் முகிலன் (6). இவா் ராஜேஷின் தாயாா் விஜயாவின் பாதுகாப்பில் மேல்பட்டியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முகிலன் திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததால் அப்பகுதி மக்கள் மேல்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து சிறுவனின் பெற்றோரை திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டனா்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் உறவினா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.