ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கல்லூரி மாணவா்கள் ரத்த தானம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில், கல்லூரிநிறுவனா் கு.மா.கோவிந்தராசனாரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமைநடைபெற்ற முகாமில் 110 மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா்.

ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த கே.எம்.ஜி.கல்லூரி நிா்வாகிகள்

Published On :23 ஜூலை 2026, 12:29 am IST

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில், கல்லூரிநிறுவனா் கு.மா.கோவிந்தராசனாரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமைநடைபெற்ற முகாமில் 110 மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா்.

முகாமுக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா்.

குடியாத்தம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவா்கள் மஞ்சுநாதன், எம்.மாறன்பாபு, ஆக்னெஸ் பியூலா ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு 110 மாணவா்களிடம் ரத்த தானம் பெற்றனா். கல்லூரி இயக்குநா் ஜி.சசிக்குமாா், கல்லூரி கல்விப்புல முதன்மையா் த.மணிகண்டன், கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.