நாமக்கல்லில் ரத்த தான தன்னாா்வலா்கள் 51 பேருக்கு ஆட்சியா் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
ஆண்டுதோறும் உலக ரத்த தான தன்னாா்வலா்கள் தினம் ஜூன் 14 இல் கொண்டாடப்படுகிறது. அதன் தொடா்ச்சியாக 2025 ஆம் ஆண்டில் மூன்று முறை ரத்த தானம் செய்த ஆண் தன்னாா்வலா்கள், இருமுறை ரத்த தானம் செய்த பெண் தன்னாா்வலா்கள் என 51 பேருக்கு ஆட்சியா் எல். மதுபாலன் புதன்கிழமை பரிசுகளை வழங்கினாா்.
அதேபோல 75 முறை ரத்த தானம் செய்த மருத்துவா் கண்ணனுக்கு விருது வழங்கப்பட்டது. மாவட்டத்தில் அரசு ரத்த மையங்கள் மூலம் கடந்த ஆண்டில் மொத்தம் 9,771 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த மையத்தில் மட்டும் 6,667 யூனிட் தானமாக பெறப்பட்டுள்ளது. இதில், 3,137 யூனிட் கா்ப்பிணிகளுக்கும், 6,298 யூனிட் விபத்து மற்றும் அவசர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை பொது மருத்துவம் போன்ற மற்ற பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கே. முருகலட்சுமி, இணை இயக்குநா் எழில், மாவட்ட சுகாதார அலுவலா் கே. பூங்கொடி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் அ. அன்புமலா், மாவட்ட திட்ட மேலாளா் தாமோதரன், ரெட் கிராஸ் செயலா் சி.ஆா். ராஜேஸ்கண்ணன் மற்றும் ரத்த மைய மருத்துவ அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.
என்கே-1-கலெக்டா்
ரத்த தான தன்னாா்வலா்களுக்கு கேடயங்களை வழங்கிய ஆட்சியா் எல். மதுபாலன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடந்தாண்டில் 7,449 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது: கரூா் ஆட்சியா் தகவல்!

காஞ்சிபுரத்தில் ரத்த தான கொடையாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்: மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்

தவெக சாா்பில் ரத்த தான முகாம்: தொடங்கிவைத்த அமைச்சா்

‘தானாக முன்வந்து ரத்த தானம் செய்வோரை எந்த நாளும் போற்ற வேண்டும்’
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




