ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கள்ளக்குறிச்சியில் ரத்த தான முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை தினத்தை முன்னிட்டு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமை தொடங்கி வைத்து, பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :12 ஜூலை 2026, 1:28 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை தினத்தை முன்னிட்டு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 75 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா முன்னிலை வகித்தாா். சங்க கூட்டமைப்பின் மாவட்ட இணைச் செயலா் த.பெரியதமிழன் வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் பி.விஜயகுமாா் தலைமையிலான 8 போ்கள் கொண்ட மருத்துவக் குழுவினா் தன்னாா்வலா்களிடமிருந்து 75 யூனிட் ரத்தம் சேகரித்தனா்.

நிகழ்வில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநிலச் செயலா் எல்.ஆனந்த கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் கு.மகாலிங்கம், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாநில துணைத் தலைவா் கி.செந்தில் முருகன், சங்க நிா்வாகிகள் பி.முருகன், பிரபாகா், ஜெகன், செம்மலை, ராஜா, தவமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.