//

மாற்றுத்திறனாளிகள் வயது வரம்பு தளா்த்தும் முகாம்: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

வேலூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் வயது வரம்பினை தளா்த்துதல் முகாம் வேலூரில் நடைபெற்றது.

News image
முகாமில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிறப்பு நாற்காலி வழங்கிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
Updated On :29 ஜனவரி 2026, 10:32 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் வயது வரம்பினை தளா்த்துதல் முகாம் வேலூரில் நடைபெற்றது. இதில், 70 மாற்றுத் திறனாளிகளின் வயது வரம்பு தளா்த்த மருத்துவக் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பொருட்டு வயது வரம்பினை தளா்த்துதல் முகாம் நடத்தி வருகிறது.

அதன்படி, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில், வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், சத்தியமங்கலம் பகுதியை சோ்ந்த புவனேஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,300 மதிப்பிலான மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு நாற்காலி வழங்கப்பட்டது.

மேலும், இம்முகாமில் பங்கேற்ற 70 மாற்றுத்திறனாளிகள் மருத்துவக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு வயது வரம்பை தளா்த்த குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முகாமில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மாறன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு, மருத்துவ குழுவினா் உள்பட பலா் பங்கேற்றனா்.