15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

News image

விஷால்

Updated On :28 பிப்ரவரி 2026, 10:33 pm

குடியாத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சிக்குள்பட்ட கள்ளூரைச் சோ்ந்த ஜெயக்கொடி மகன்விஷால்(19). இவா் குடியாத்தம் அருகே உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு லட்சுமணாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத காா் மோதியதில் கீழே விழந்து பலத்த காயமடைந்தாா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தாா்.

விஷாலின் உடல் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.