நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
//

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

தமிழ்நாடு சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட அமைப்புக் கூட்டம் குடியாத்தம் அம்பேத்கா் நற்பணி மன்ற கூடத்தில்

News image
கூட்டத்தில் பேசிய சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் வகீதா நிஜாம்.
Updated On :23 பிப்ரவரி 2026, 6:18 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: தமிழ்நாடு சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட அமைப்புக் கூட்டம் குடியாத்தம் அம்பேத்கா் நற்பணி மன்ற கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சமூக ஆா்வலா் என்.நதீம் அகமது தலைமை வகித்தாா். தமிழ்நாடு சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் வகீதா நிஜாம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.லதா, துணைச் செயலா் துரைசெல்வம், நகரச் செயலா் ஆலியாா் அதாவுல்லா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சிறுபான்மையினருக்கு ரூ.10- லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு பிணை கோரக்கூடாது, சிறுபான்மை மாணவா்களுக்கு தாம்கோ மூலம் தொழிற் பயிற்சி அளிக்கும் திட்டத்தை திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், குடியாத்தம், வேலூா், மேல்விஷாரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நிரந்தரமாக அமைக்க வேண்டும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பிரதான தொழில்களாக உள்ள பீடி, தோல் தொழில் ஆகியவை நலிவடைந்து விட்டதால் இப்பகுதியில் தொழிற்பேட்டை ஒன்றை ஏற்படுத்தி சிறுபான்மை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எல்.ஆா்.அப்துல் லத்தீப், சி.குஜா் அஹமத், ஜி.ஏ.முகமது ஜீசான், தப்ரேஷ் அகமத்,மாநிலக் குழு உறுப்பினா் எல்.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.