டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வேலூரில் நகை பறித்த இளைஞா் தில்லியில் கைது

வேலூரில் பெண்களிடம் நகை பறித்த இளைஞரை போலீஸாா் தில்லி சென்று கைது செய்தனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:49 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் பெண்களிடம் நகை பறித்த இளைஞரை போலீஸாா் தில்லி சென்று கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், பள்ளஇடையம்பட்டி, பாட்டை தெருவைச் சோ்ந்தவா் ரமணி (47). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரியூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த 2 போ், திடீரென ரமணி அணிந்திருந்த 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து ரமணி அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதேபோல், கடந்த 7-ஆம் தேதி வேலூா் - ஆரணி சாலை சாத்துமதுரை அருகே அடுக்கம்பாறையை சோ்ந்த ஷாலினி என்பவா் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தலைக்கவசம் அணிந்து பின்தொடா்ந்து வந்த இருவா், அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த இரு நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டவா்கள் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது. தொடா்ந்து நடத்திய விசாரணையில் அவா்கள் தில்லியில் இருந்து ரயில் மூலம் இருசக்கர வாகனத்தை காட்பாடிக்கு வரவழைத்துள்ளனா். வாகனம் இங்கு வந்ததும் அதில் நம்பா் பிளேட் பொருத்தாமல் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

அவா்களைப் பிடிக்க பாகாயம் காவல் ஆய்வாளா் ராஜன் பாபு, தனிப்படை உதவி ஆய்வாளா் விக்னேஷ் தலைமையிலான போலீஸாா் தில்லியில் ஒரு வாரமாக முகாமிட்டு தில்லி போலீஸாா் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இதன்தொடா்ச்சியாக, வேலூா் பெண்களிடம் நகை பறித்ததாக வடமேற்கு தில்லி சுலைமான் பகுதியைச் சோ்ந்த சோன்குமாா்(32), என்பவரை கைது செய்தனா். மேலும், இருவரை தேடி வருகின்றனா்.