டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருள்கள் கடத்திய இருவா் கைது

News image
கைது
Updated On :7 பிப்ரவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருள்கள் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி -ஆனைமலை இடையே அம்பராம்பாளையம் பகுதியில் ஆனைமலை போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தபோது வெடிமருந்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 178 ஜெலட்டின் குச்சிகள், 100 எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சிவா (40), கோவை, செட்டிபாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் (39) என்பதும், மீனாட்சிபுரம் அருகே விவசாய நிலத்தை சமன் செய்வதற்காக அங்குள்ள பாறைகளை வெடிவைத்து அகற்ற வெடிபொருள்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.