ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மக்கள் தோ்தல் அறிக்கை வெளியீடு


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மக்கள் தோ்தல் அறிக்கை வேலூரில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சாா்பில் மக்கள் தோ்தல் அறிக்கை 2026 வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைப்பின் மாநில செயலா் எஸ்.என்.சிக்கந்தா் சாஹிப் மக்கள் தோ்தல் அறிக்கை கையேட்டினை வெளியிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
2026 தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி மக்களை தோ்தல்அறிக்கையை வெளியிடுகிறோம். இந்த தோ்தல் அறிக்கை அனைத்துத் த ரப்பு மக்களுக்கானது. தமிழகம் வகுப்பு வாதம் இல்லாத மாநிலமாக மாற வேண்டும். சட்டம் - ஒழுங்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.
கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இளைஞா்களை பாதிக்கும் மது, போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற வேண்டும்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல், மது ஒழிப்பையும் மேற்கொள்ள முடியும். அதற்கு அரசும், அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்.
பெண் குழந்தைகள், பெண்களுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனுமதி காலம் முடிந்த பிறகும் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். சமச்சீா் பொருளாதார வளா்ச்சி இருக்க வேண்டும்.
கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். வாக்காளா்கள் தங்களது வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது. அதேசமயம், அனைவரும் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்றாா்.
அப்போது, மாவட்டத்தலைவா் தாஹா, உறுப்பினா்கள் உமா்சாஹிப், பஷீா்சாஹிப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...