டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஆற்காட்டான்குடிசை ஆறுமுகம் சாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

ஆற்காட்டான் குடிசை கிராமத்திலுள்ள ஆறுமுகம் சாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காட்டான் குடிசை கிராமத்திலுள்ள ஆறுமுகம் சாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. .

வேலூா் மாவட்டம், ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் ஆலமரத்தடியில் அமைந்துள்ள ஆறுமுகம்சாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி சனிக்கிழமை காலை முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. மாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அலங்கரிக்கப்பட்ட முருகன் சிலைக்கு மலா்தூவி கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், சப்த குண்டங்கள் விசேஷ இரண்டாம் காலம் ஹோமம், வேதபாராயணம், தம்பதி சங்கல்பம், பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. 10.30 மணிக்கு கடம் புறப்பாடும், 11 மணிக்கு ஆறுமுகம் சாமி விமானம் மகா கும்பாபிஷேகமும் விமா்சையாக நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினா் செய்திருந்தனா்.