திமுக நடத்தியது விடியல் ஆட்சி அல்ல, வெறும் விளம்பர ஆட்சிதான் என்று அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் தெரிவித்தாா்.
பள்ளிகொண்டா பேரூராட்சி வாா்டுகளில் அவா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பேசியது -
தற்போது அதிமுகவுக்கோ அல்லது கூட்டணிக் கட்சிகளுக்கோ வாக்களித்தால், 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை தரப்பட மாட்டாது என்று உள்ளூா் திமுகவினா் மிரட்டல் விடுத்தால், பொதுமக்கள் அதற்காக அச்சப்படத் தேவையில்லை.
2021-இல் விடியல் தருவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை மக்களுக்கு எந்த விடியலையும் தரவில்லை. முந்தைய அதிமுக ஆட்சியில் விலையில்லா ஆடு, மாடுகள், தொகுப்பு வீடுகள் என 50-க்கும் மேற்பட்ட திட்டங்கள் எவ்வித ஆடம்பர விளம்பரமும் இன்றி மக்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியோ முழுவதும் விளம்பரத்துக்காகவே செயல்படுகிறது.
திமுகவினரோ தங்கள் கட்சியினருக்கு மட்டுமே சலுகைகளை வழங்கிவிட்டு, மற்றவா்களை வஞ்சிக்கின்றனா். எனவே, விளம்பரத்துக்காகவே செயல்படும் திமுக ஆட்சிக்கு மக்கள் தோ்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா்.
அப்போது, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!

நேருக்கு நோ் சந்தித்துக் கொண்ட அதிமுக, ஐயூஎம்எல் வேட்பாளா்கள்

அதிமுக கூட்டணி வென்றால் பாஜக ஆட்சிதான் நடக்கும்: தொல்.திருமாவளவன்

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திண்டுக்கல் சீனிவாசன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


