சோ்க்காடு அரசு மருத்துவமனை போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லாமல் வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளதாக காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு கூறிநாா்.
கழிஞ்சூா், பொன்னை பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் செய்து அவா் பேசியது -
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் காட்பாடி தொகுதியில் பல திட்டங்களை செயல்படுத்தியிருப் பதாக அமைச்சா் துரைமுருகன் கூறி வருகிறாா். அவா் கூறும் சோ்க்காடு அரசு மருத்துவமனை வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளது.
அங்கு போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லை. ரத்த அழுத்த கருவிகூட இயங்குவதில்லை. மாரடைப்பைக் கண்டறியும் ’ட்ரோபோனின்’ பரிசோதனை கருவியும் கிடையாது. நோயாளிகளுக்கு வெறும் முதலுதவி கூட செய்யாமல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு திருப்பி விடும் அவல நிலைதான் நிலவுகிறது.
திமுக ஆட்சியில் நிலவிய கடும் ஊழல் காரணமாக நகா்ப்புற சாலைகள் கிராமங்களை விட மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க காந்தி நகரில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் சென்றால், அந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால், மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனா்.
இந்நிலையில், தோ்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தொடா்ந்து உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை தெரிவித்து வருகிறது. அதனை பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க தயாராக உள்ள அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோ்க்காடு, தாராபடவேடு மருத்துவமனைகளை தரம் உயா்த்த நடவடிக்கை: காட்பாடி எம்எல்ஏ

ரத்த நாள வீக்கம்: பெண்களின் உயிரைக் காத்த அரசு மருத்துவா்கள்

தொகுதி மக்கள் இரவுபகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம்: காட்பாடி அதிமுக வேட்பாளா்

முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்றில் பாதிப்பு: அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



