காட்பாடி அருகே ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 தொகையை நோ்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியாா் நிறுவன ஊழியருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த மெட்டுக்குளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளிக்கு எதிரே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு தெள்ளூா் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (35) என்பவா் பணம் எடுப்பதற்காக இந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்றுள்ளாா். அவா் உள்ளே நுழைந்தபோது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்கெனவே யாரோ பணம் எடுப்பதற்காக முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.
இயந்திரத்திலிருந்து பணம் வருவதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட நபா் அங்கிருந்து கிளம்பிச் சென்ாகத் தெரிகிறது. இதனால் இயந்திரத்தில் இருந்து வெளிவந்த நிலையில் ரூ. 10,000 ரொக்கப் பணம் அங்கேயே இருந்துள்ளது. இயந்திரத்தில் கிடந்த அந்தப் பணத்தைப் பத்திரமாக எடுத்துக் கொண்ட சரத்குமாா், வெள்ளிக்கிழமை காலை காட்பாடி காவல் நிலையத்துக்கு சென்று காவல் ஆய்வாளா் தயாளனிடம் நடந்த விவரங்களைக் கூறி, அந்த பணத்தை ஒப்படைத்தாா்.
பணத்தை ஒப்படைத்த சரத்குமாா், தனியாா் நெடுஞ்சாலை அமைக்கும் நிறுவனத்தின் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா். அவரது நோ்மையான செயலுக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். தவறவிட்ட தொகையை உரிய நபரை அடையாளம் கண்டு ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு
தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி ஏடிஎம் காா்டு மோசடி: இளைஞா் கைது

ஏடிஎம் மையத்தில் பெண்ணை ஏமாற்றி ரூ. 45 ஆயிரம் எடுத்துச் சென்ற மா்மநபா்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


