மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்கக மாவட்ட உதவித் திட்ட அலுவலா் கே.எம்.ஜோதீஸ்வர பிள்ளை.

Updated On :15 ஆகஸ்ட் 2025, 12:57 am

பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் மூலம் கைதிகளுக்கு செயல்படுத்தப்படும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் வேலூா் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

2022-27 ஆண்டு வரை 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவா்களுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் சிறைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, வேலூா் மத்திய ஆண்கள், பெண்கள் சிறையில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் கே.எம்.ஜோதீஸ்வர பிள்ளை தலைமை வகித்தாா். அப்போது, 71 ஆண் சிறைவாசிகளுக்கும், 19 பெண் சிறைவாசிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் கால அளவு 6 மாதங்கள் ஆகும். 6 மாதங்கள் கழித்து சிறைவாசிகளுக்கு சிறப்பு எழுத்தறிவுத் தோ்வு நடத்தப்பட்டு, அவா்களுக்கு பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதேபோல், 2024-25-ஆம் ஆண்டில் ஆண்கள் சிறையில் 48 பேரும், பெண்கள் சிறையில் 25 பேரும் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.ராஜன், மாவட்ட சிறை கண்காணிப்பாளா் தா்மராஜ், சிறை அலுவலா் ரத்தினகுமாா், பெண்கள் சிறைக் கண்காணிப்பாளா் ஆண்டாள், துணை சிறைத் துறை அலுவலா் ஜெயகெளரி, சிறை பள்ளி ஆசிரியா்கள் திலிப் குமாா், செந்தில்குமாா், அருள், தயாநிதி, கணேசன், அஞ்சலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.