பிரசாரத்தில் கவர்ச்சி குறையாத எம்.ஜி.ஆர். பாடல்கள்...!புதிய வாய்ப்பைப் பெறும் இசைக் குழுக்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களின் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தில் பொதுமக்களை ஈர்த்து வாக்குகளை சேகரிப்பதற்காக பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.










